Breaking News

தபால்துறையின் கட்டிடத்தை இடித்த ரயில்வே நிர்வாகம்.


மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் 1வது நடைமேடையில் 100 ஆண்டுகளாக இரவு நேரத்தில் செயல்பட்டு வரும் விரைவு தாபல் சேவையை வழங்கும் ஆர்எம்எஸ் அலுவலகத்திற்கு இடம் தராமல் கட்டிடத்தை இடிக்கும் ரயில்வே நிர்வாகத்தால் அஞ்சலக சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தபால்துறையினர், பொதுமக்கள் அதிர்ச்சி. நடவடிக்கை எடுக்க கோரிக்கை:-



மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் ஆர்எம்எஸ் தபால் நிறுவனம் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. மாலை 6 மணி முதல் காலை 6.40 மணிவரை இயங்கும் இந்த அலுவலகத்தில் விரைவு தபால்கள் இரவு நேரத்தில் அனுப்புவதற்கு பொதுமக்கள் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 77 தலைமை மற்றும் துணை அஞ்சலகத்தில் இருந்து வரும் தபால்கள், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள 54 தபால் நிலையங்களில் இருந்து வரும் தபால்கள், பதிவுக்கட்டுகளை ஊர்வாரியாக பிரித்து உடனுக்குடன் அனுப்பும் பணி இந்த ஆர்எம்எஸ் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 36 நிரந்தர பணியாளர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 


அஞ்சல்துறை மூலம் பாஸ்போர்ட், அரசு வேலைக்கான பணி ஆணைகள், பேன்கார்டு, வங்கி ஏடிஎம் கார்டுகள், தபால் ஓட்டுக்கள் உட்பட பல்வேறு முக்கிய பணிகளை இரவு நேரத்தில் இந்த அஞ்சலகம் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விரிவாக்க பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் ஆர்எம்எஸ் அலுவலகம் இயங்கி இடத்தில் ஒரு பகுதியை அகற்றிவிட்டு படிகட்டுக்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.


ஆர்எம்எஸ் அலுவலகத்திற்கு வேறு இடம் வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் கூறி பல மாதங்கள் ஆகியும் இதுவரை இடம் ஒதுக்கி கொடுக்காததால் ஆர்எம்எஸ் அலுவலகத்தை திருவாரூர் அலுவலகத்துடன் இணைக்கும் முடிவை ஆர்எம்எஸ் அலுவலக உயர் அதிகாரிகள் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  


ரயில்வே நிர்வாகமும், அஞ்சல்துறையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து ரயில்வே ஜங்ஷன் பகுதிகளில்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்எம்எஸ் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. அதேபோல் மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷன் ஒன்றாவது நடைமேடை பகுதியில் இயங்கி வந்ததை தற்போது விரிவாக்க பணிக்காக இடத்தை காலிசெய்யசொல்லி வேறு இடத்தை தருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்த நிலையில் தற்போதுவரை இடம் கொடுக்காமல் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் ஆர்எம்எஸ் அலுவகத்ததை உயர்அதிகாரிகள் திருவாரூர் அலுவலகத்துடன் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டும் பொதுமக்கள் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு அஞ்சல்துறை சேவைகள் வெகுவாக பாதிப்படைவதோடு பதிவு தபால்கள், விரைவு பதிவு தபால்கள் உரிய நேரத்தில் மக்களுக்கு சென்றடைவதில் காலதாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுளள்தால் உடனடியாக ரயில்வே நிர்வாகம் மயிலாடுதுறை ஆர்எம்எஸ் அலுவலகத்திற்கு மாற்று இடத்தை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments

Copying is disabled on this page!