மாநில அளவிலான யோகாசன போட்டியில் புதுக்கோட்டை செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் சாதனை.
தமிழ் கலாச்சாரம் மற்றும் யோகா விளையாட்டு டிரஸ்ட் சார்பில் மாநில அளவிலான 9ஆம் ஆண்டு யோகாசனப் போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது. இப்போட்டியில் புதுக்கோட்டை அருகே மங்களகிரி செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 8 - 10 வயது பிரிவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் அபர்ணா நீத்து, சனாதானா ஆகிய இருவரும் முதல் பரிசை பெற்றனர்.
12- 14 வயது பிரிவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் பிரவீனா 2ம் பரிசை பெற்றார். 8- 10 வயது பிரிவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் லெனின் பாபு மூன்றாம் பரிசையும் பெற்று சிறப்பிடம் சாதனை படைத்தனர். மேலும், போட்டியில் முதலிடம் பெற்ற அபர்ணா நீத்து, சனாதனா ஆகியோர் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6, 7, 8, ஆகிய தேதிகளில் நடைபெறும் 43 வது தேசிய அளவிலான யோகாசன போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், அவர்களுக்கு பயிற்சியளித்த மாஸ்டர் சிவசக்தி முருகன், பொறுப்பாசிரியர் மெல் ரோஸ் ஷீபா ராணியையும், பள்ளித் தாளாளர் மற்றும் முதல்வர் பேட்ரிக் அந்தோணி விஜயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
No comments