Breaking News

மீஞ்சூர் அருகே 100நாள் வேலை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்.


மீஞ்சூர் அருகே 100நாள் வேலை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். காவல்துறை பேச்சுவார்த்தை.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கடந்த சில நாட்களாக முறையாக 100நாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


கூலி தொழிலாளர்களில் பெரும்பாலானோர் 100நாள் வேலையை மட்டுமே நம்பியுள்ளதாகவும், அதிகாரிகள் உடனடியாக தங்களுக்கு 100நாள் வேலை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மீஞ்சூர் - காட்டூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடம் பேசி 100நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு சாலையோரத்தில் திரண்டபடி அதிகாரிகள் வந்து உறுதியளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். 


தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments

Copying is disabled on this page!