Breaking News

தொடர் மின் வெட்டு;பொதுமக்கள் அவதி; உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

மாதிரி படம்.


புவனகிரி சுற்றியுள்ள கிராம புற பகுதியில் சிறு மழை பெய்தாலும் தொடர் மின்வெட்டு குழந்தைகள் முதியவர்கள் நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் தூக்கமின்றி அவஸ்தை அடைந்து வருகின்றனர், இனி வரும் மழை காலத்தை மின்வாரியம் எப்படி தாக்கு பிடிக்கும் என பொது மக்கள் கேள்வி.



கடலூர் மாவட்டம் புவனகிரி அதன் சுற்றுவட்டார  கிராமப்புற பகுதிகளில் சிறு காற்று மழை பெய்தாலும் பல மணி நேர தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் குறிப்பாக கிராமப்புற பகுதியில் தொடர்ந்து  இந்த அவல நிலை  காணப்படுகிறது  குறிப்பாக மழை நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஆகிறது மின்சாரம் கிடைக்க சில நேரங்களில் விடிய விடிய கூட மின்சாரம் கிடைக்க பெறுவதில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


இரவு நேரங்களில் மின் வெட்டு என்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும்  குறிப்பாக குழந்தைகள் முதியவர்கள் நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் காலையில் எழுந்து கூலி வேலைக்கு செல்லும் உழைப்பாளர்கள் தூக்கமின்றி தவித்து வருவதாகவும்  விஷ ஜந்துக்களால் இருண்ட நேரத்தில் உயிர் ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக வேதனை தெரிவித்து வருகின்றனர் அதே வேளையில் புயல் காற்றே  அடித்தாலும் நகர் புறங்களில் மட்டும் மின்வாரியம் பம்பரம் போல் சூழன்று துரிதமாக மின்சாரம் வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஆனால் கிராம புற பகுதிகளில் துரித வேகத்தில் மின்சாரம் கிடைப்பது என்பது இதுவரையிலும் நடக்காத ஒன்றாக இருந்து வருகிறது இது பற்றி  பல முறை மின் வாரியத்திடம் கூறியும் கிராம புறங்களில் தடை இல்லா மின்சாரம் வழங்க மின் வாரியம் எவ்வித நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினால் மழை பெய்கிறது என்ன செய்வது என அவர்களுக்கு உரித்தான பாணியில் பதில் கூறுகின்றனர்.


புவனகிரி சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் மின்சாரத்தை நகர் புறங்களில் வழங்குவது போல் தடையின்றி வழங்கிட பொதுமக்கள் வேதனையோடு  கோரிக்கை வைக்கின்றனர்‌, இனி வரும் மழை காலத்தில் அடிக்கடி காற்று மழை பெய்யும் புவனகிரி மின் வாரியம் தாக்கு பிடிக்குமா தடையின்றி மின்சாரம் வழங்குமா கிராமப்புற மக்களின் கோபத்திற்கு ஆளாகுமா என  ஆழமான கேள்வி எழுகிறது.


முந்தைய அதிமுக ஆட்சியில் மின்சாரம் தடையில்லாமல் கிடைத்தது ஆனால் திமுக ஆட்சி வந்தால் தான் இந்த மின் வெட்டு ஏற்படுகிறது என மக்கள் முனுமுனுத்து வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!