புதுச்சேரி காவல்துறையில் 305 போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி காவல்துறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்பின் அடுத்த சில மணி நேரங்களில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இது காவல்துறையில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் 305 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் புதுச்சேரி ஆயுதப்படையில் பணியாற்றி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான உத்தரவை புதுச்சேரி காவல்துறை தலைமையகம் எஸ்.பி., சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments