Breaking News

திருப்பத்தூர் வன சாரக அலுவலகத்தில் மரக்கன்றுகள் விநியோகம்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வனச்சரக அலுவலகம் தெக்குப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது. வனத்துறையின் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. 


வட கிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பு நடுவதற்காக பயனாளிகளுக்கு ஆலன், மகிழம், அத்தி, அரசன், நாவல், மகாகனி, பாதாம், புங்கன், வேம்பு, வேங்கை, நீர்மருது, ஈட்டி, வேங்கை, செம்மரம் போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு தயாராக உள்ளதாக வனத்துறையினர் கூறினர். 



வனத்துறை சார்பில் இங்கு வழங்கப்படும் மரக்கன்றுகள் பெற விரும்பும் பயனாளிகள் பட்டா அல்லது சிட்டா நகல், ஆதார் அட்டை நகல்,  போட்டோக்கள் எடுத்து வர வேண்டும். விளை நிலங்களில் வைக்க தேவையான மரக்கன்றுகளும்,  வழிபாட்டுத் தலங்களில் வைக்க தேவையான மரக்கன்றுகளும், கல்வி நிலையங்களில் வைக்க தேவையான மரக்கன்றுகளும் இங்கு உள்ளதாக கூறினர்.

No comments

Copying is disabled on this page!