திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 38 கிலோ குட்கா பறிமுதல் முதியவர் கைது.
திருவள்ளூர் மாவட்டம், கனக்கம்மாச்சத்திரம் அடுத்த கூர்மவிலாசபுரம் கிராமத்தில் சுப்பிரமணி வயது (58) என்ற முதியவர் ஆந்திராவிலிருந்து தமிழக அரசு தடை செய்த குட்கா பாக்கெட்டுகளை வாங்கி வந்து தனது கிராமத்தில் விற்பனை செய்துள்ளார்.
அதேபோல் ஆந்திராவில் இருந்து ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ளான குட்கா பொருட்களை வாங்கிக் கொண்டு மேற்கண்ட கூர்மவிலாசபுரம் கிராமத்தில் இவரது கடையில் விற்பனை செய்வதற்காக எடுத்து வரும் பொழுது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது அவ்வழியாக சென்ற முதியவர் சுப்பிரமணி இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அரசு தடை செய்த குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 38 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அரசு தடை செய்த குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்ததாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு முதியவர் சுப்பிரமணி கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர் செய்த சிறையில் அடைத்தனர்.
No comments