Breaking News

திருநெல்வேலி மாநகராட்சி புதிய மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம் துவங்கியது!!


திருநெல்வேலி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினருக்கும் மேயருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக புதிய மேயராக ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார், அதைத் தொடர்ந்து இன்று மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாமன்ற கூட்டம் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ராஜாஜி கூட்டரங்கில் துவங்கியுள்ளது.


55 மாமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் தற்போது வரை 30 மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே மாமன்ற கூட்டத்திற்கு வந்துள்ளனர், புதிய மேயருக்கு எதிராக 23 பேர் வாக்களித்த நிலையில் மீண்டும் மேயர் மாமன்ற உறுப்பினர் கீழே மோதல் போக்கு துவங்கியுள்ளது, தற்போது வரை 38 உறுப்பினர்கள் வந்துள்ளனர்.


தீர்மானங்களை மாமன்ற கூட்டத்தில் விவாதம் செய்த பிறகு நிறைவேற்ற வேண்டும் என மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் வாக்குவாதம், அமர வலியுறுத்தியும் தொடர்ந்து பவுல்ராஜ் பேசி  வருவதால் பரபரப்பான சூழல்  ஏற்பட்டுள்ளது, திமுக வில் இருந்து தற்காலிமாக நீக்கப்பட்ட   பவுல்ராஜ் தொடர்ந்து எதிர் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

No comments

Copying is disabled on this page!