Breaking News

உளுந்தூர்பேட்டையில் மூதாட்டி தலையில் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் நகை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி விருத்தாசலம் ரோடு மன்னார் சாமி தெருவில் வசித்து வருபவர் சாமிநாதன் மனைவிதுளசி (75). இவர் தனது மகன் அன்பழகன் வீட்டின் ஒரு பகுதியில் தினந்தோறும் கட்டில் போட்டு வெளியே படுத்து தூங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்காததால் மகன் மற்றும் உறவினர்கள் சென்று பார்த்தபோது தலையில் பலத்த வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்தார். 


இதேபோல் உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்- இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், ப்ரீத்தா மற்றும் போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர் மூதாட்டி துளசி அணிந்திருந்த கால் பவுன் தோடு காணாமல் போனதால் நகைக்காக இந்த சம்பவம் நடைபெற்றதா? அல்லது முன்விரோதம் உள்ளிட்ட வேறு ஏதாவது சம்ப வம் காரணமாக மூதாட்டி துளசி வெட்டப்பட்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!