அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
புவனகிரி அருகே உள்ள வட ஹரிராஜபுரம் பகுதியில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஆக.26) நடைபெற்றது. புவனகிரி சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் அருண்மொழிதேவன் பங்கேற்று புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.
இதில் அக்கட்சியின் தலைமை பேச்சாளர் முருகமணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி மாவட்ட மாணவர் அணி தலைவர் வீரமூர்த்தி மற்றும் கட்சியினர் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments