திருப்பத்தூர் வெங்காயப்பள்ளி ஊராட்சி ஸ்ரீ மாரியம்மன் கும்பாபிஷேக விழா.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா வெங்காயப்பள்ளி ஊராட்சி காந்தி நகர் கிராமத்தில் இன்று காலை 10 மணியளவில் ஸ்ரீ மாரியம்மன் ஆலய அஸ்பந்தன மஹா கும்பாபிஷேக விழா ஊர் முக்கியஸ்தர் விஸ்வநாதன் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் நாகராஜ் குருக்கள் முன்னிலையில் மகா கணபதி ஹோமம் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் மகா தீபாராதனை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கலச கோபுரத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
உடன் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகேந்திரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜா, சாமிநாதன், சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா, கிராம செயலாளர் வெங்கடேசன் மற்றும் பிரகாஷ் கோயில் நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.
No comments