Breaking News

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் திருக்கோவிலின் 64 வது பிரமோற்சவ விழா.


புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் திருக்கோவிலின் 64 வது பிரமோற்சவ விழாவையொட்டி,  ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளிய விநாயக பெருமானை பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.


புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவிலில், பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி  64வது ஆண்டு பிரம்மோற்சவம் விழா கடந்த 09 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றுத்துடன்  துவங்கியது. தினந்தோறும் மணக்குள விநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றார்.


இதனையொட்டி இன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட விநாயகருக்கு பல்வேறு தீபாராதனைகள் காட்டப்பட்டு, ஊஞ்சல் உற்சவத்தில் வைக்கப்பட்ட  விநாயக பெருமானுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. ஊஞ்சல் உற்சவ விழாவில்  பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு விநாயக பெருமானை வழிபட்டு சென்றனர்.


- இரா. சரவணன் மாவட்ட செய்தியாளர் புதுச்சேரி.

No comments

Copying is disabled on this page!