திருப்பத்தூர் மாவட்ட அளவில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா சின்னக் கல்லுப்பள்ளி ஸ்ரீ கோகுலம் மஹாலில் 25.08.2024 அன்று திருப்பத்தூர் மாவட்ட அளவில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி நடைபெற்றது. கலைஞர் பற்றிய பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் இருந்து 17 மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் முதுகலை இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவி பல்லவி, மூன்றாம் ஆண்டு வணிக மேலாண்மை துறை வைஷ்ணவி மற்றும் இரண்டாம் ஆண்டு வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை சுவதிகா ஆகியோர் ரூ10,000/- வீதம் மொத்தம் 30,000/- பரிசு பெற்றனர்.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ், புத்தகம், வாட்டர் பாட்டில் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரித் தலைவர் வி.திலீப்குமார் ஜெயின், செயலாளர் ஆனந்த் சிங்வி, கல்லூரி முதல்வர் முனைவர் ம.இன்பவள்ளி, கல்வி ஆலோசகர் முனைவர் டி.பாலசுப்ரமணியன், தலைமை நிர்வாக அலுவலர் பி.சக்திமாலா பல்துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.
No comments