Breaking News

கடையநல்லூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக 12 லட்சம் மோசடி செய்த நில அளவையர் மற்றும் இவரது மனைவி கைது.


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த  மாரிமுத்துராஜா (46) கோவையில் அரசு நில அளவையராக (சர்வேயர்) வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பரான செங்கோட்டை பகுதியை சேர்ந்த சரவணனும் சேர்ந்து இளவல் ஜீவபாரதி, யோவான், ராஜ்குமார், செந்தில் கணேஷ் ஆகியோருக்கு  அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இவரது  நண்பரான கடையநல்லூர்  கண்மணிபுரம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற நிலஅளவையர் வேலுசாமியின் மூலம் 9 லட்சத்து பத்தாயிரம் பெற்றுள்ளனர்.

இதே போன்று மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த வெள்ளப்பாண்டி, நடராஜன் அவர்களிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மாரிமுத்து ராஜாவும் அவரது மனைவி பத்மாவும் சேர்ந்து 3 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளனர்.


இந்த நிலையில் பணத்தை வாங்கி கொடுத்த  ஓய்வு பெற்ற நிலஅளவையர் வேலுசாமி கொடுத்த அடிப்படையில் கடையநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இதே போன்று பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக க் கூறி மூன்று பேரும் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து மோசடியில் ஈடுபட்ட நிலஅளவையர் மற்றும் அவரது மனைவி இவரையும் கைது செய்தனர். 


மேலும் தலைமறைவான செங்கோட்டையை சேர்ந்த சரவணனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!