அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம். 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இரண்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிடவும், இலவச வீடு கட்டிக் கொடுத்திடவும், கிராம ஊராட்சிகளில்100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஜாப் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆண்கள் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
No comments