Breaking News

மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது.


மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யூரியா 1857 மெட்ரிக் டன்னும். டிஎபி 394 மெட்ரிக் டன்னும். பொட்டாஷ் 1021 மெட்ரிக் டன்னும், என்.பி.கே 2137 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 5.409 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நெற்பயிர் R. 20. CO 50 CR 1009. ADT 53. ADT 54. BPT 5204, TKM 13 உள்ளிட்ட ஆகிய நெல் ரகங்கள் 78.00 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள். கம்பு கோ 10 ஆகியவை 36.00 மெட்ரிக் டன்னும், பயிறு வகை பயிர்கள், உளுந்து – VBN-8& VBN-10. கொள்ளு பையூர் 2 துவரை கோ-7, கோ 11 ஆகியவை 23.00 மெட்ரிக் டன்னும் மற்றும் எண்ணெய் விந்துக்கள். நிலக்கடலை தாணி கோ-5, கோ-7. டி.எம்.வி 14. என் – டிம்.வி – 7 ஆகியவை 15.00 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது.


கரூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652.20 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு ஆகஸ்டு 2024 வரை 344.12 மி.மீ மழை பெய்துள்ளது. அதேபோன்று, ஆகஸ்ட் மாதம் முடிய 4926 ஹெக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி உரிய முறையில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.


8 விவசாயிகளுக்கு ரூ.26.89.710/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவித்தொகை வழங்கப்பட்டது. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த புதுமையான வேளாண்மை கருவிகளின் கண்காட்சியினை கலெக்டர் மாவட்ட மற்றும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ ஆகியோர் பார்வையிட்டனர். இக்கூட்டத்தில், டி ஆர்ஓ.கண்ணன். வேளாண்மை இணை இயக்குநர் ராமசாமி, கூட்டுறவு சங்ககளின் இணைப்பதிவாளர் கந்தராஜா வேளாண். அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் முகமதுபைசல், தனலெட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

No comments

Copying is disabled on this page!