புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் குறித்து பரிசீலிக்கப்படும் என பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் இலவச சைக்கிள் மற்றும் உணவு தரம் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மேனிலைப்பள்ளி மற்றும் இளங்கோ அடிகள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச லேப்டாப், மிதிவண்டி, ரெயின்கோட் ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கினார். தொடர்ந்து இளங்கோ அடிகள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவினை பார்த்து அதை உண்டு ஆய்வு செய்தார். அப்போது உணவை மாணவர்கள் சாப்பிட்டு பழகிக் கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர் உணவின் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
தொடர்ந்து செய்தியார்களை சந்தித்தார், புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு குறித்தான கேள்விக்கு, மக்களுக்கு அதிக சுமை ஏற்படாதவாறு பரிசீலனை செய்யபடும் என்றும், மாணவர்களுக்கு வழங்க படும் உணவு குறித்து ஆய்வு செய்துள்ளோம், குறைகளை நிவர்த்தி செய்வதற்க்கான நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது என்றார். மேலும் புதுச்சேரியில் தொழில் முனைவோர் மாநாடு நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றுமுதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments