புதுச்சேரியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் ரங்கசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பாஜகவின் ஓட்டு வங்கி பாதிக்கும் என்பதால் மத்திய பாஜக ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதபடுத்தி வருகிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென தமிழக முதல்வர் மு.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் புதுச்சேரியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி மவுனமாக உள்ளார். புதுச்சேரி அரசு உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர்,Bபுதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவிப்பு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். அதனால் மின்கட்டண உயர்வை புதுச்சேரி அரசு திரும்பபெற வேண்டும். மின் கட்டண உயர்வை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments