Breaking News

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் எளிதாக இணையதளம் மூலம் முன்பதிவு செய்வதற்கான முகாம்.


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் எதிர்வரும் செப்டம்பர்-2024 மற்றும் அக்டோபர்-2024 மாதங்களில் நடத்தப்படவுள்ளது.


பள்ளிமாணவ, மாணவியர்களுக்கு (12 முதல் 19 வயதுவரை) மாவட்டஅளவில் தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம், கோ-கோஆகிய 15 வகையான விளையாட்டுப் போட்டிகளும்,  கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு (17 முதல் 25 வயதுவரை) மாவட்டஅளவில் தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம் ஆகிய 14 வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. 


மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் முன் வந்து உடனடியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இணையதளத்தில் எதிர்வரும் 02.09.2024-தேதிக்குள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்திட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  


விளையாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு பதிவு செய்வது தொடர்பாக முன்கூட்டியே பள்ளி, கல்லூரிகளுக்கு தகவல் தெரிவித்திட வேண்டும் என கூறப்பட்டிருந்தது மயிலாடுதுறை மாவட்டத்தில் குறைந்த அளவில் பதிவு இருந்ததால் தற்பொழுது மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் எளிதாக இணையதளம் மூலம் முன்பதிவு   செய்வதற்கான முகாம் அமைக்கப்பட்டு முகாமினை முனைவர் மா ரஜினி நகர் மன்ற  உறுப்பினரும் அமைச்சூர் கபடி கழக தலைவர் தொடங்கி வைத்தார்.  


உடற்கல்வி ஆசிரியர்கள் சேரன், ஷாஜகான், சுபா மற்றும் மாரத்தான் வினோத் கபடி காசி கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர். பள்ளி கல்லூரி மாணவர்கள் விளையாட்டு வீரர்கள் பலர் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவு முகாம் தொடங்கப்பட்டதன் காரணமாக தமிழகத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்காண முன்பதிவு செய்வதில் 38 வது இடத்தில் இருந்து தற்போது 17 இடத்திற்கு முன்னேறி உள்ளது என்றும் இன்னும் சில தினங்களில் பத்தாவது இடத்திற்குள் வந்து விடுவோம் என்று அமெச்சூர் கபடி கழகத் தலைவர் மா.ரஜினி தெரிவித்தார்.

No comments

Copying is disabled on this page!