சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - 3ஆம் பட்டமளிப்பு விழா மற்றும் விருது வழங்கும் விழா.
சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 3ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் விருது வழங்கும் விழா 2024 ஆகஸ்ட் 25ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவின் தலைமை விருந்தினராக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறை அன்பு கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஜி.ரவி பங்கேற்றார்.
மரியாதைக்குரிய விருந்தினர்களாக முன்னாள் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எஸ்.சுப்பையா, தேவகோட்டை அனந்தா கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் ஜான் வசந்தகுமார், ஸ்ரீ சரதா நிகேதன் மகளிர் கல்லூரி செயலாளர் எத்தேஸ்வரி சரதேஸ்வரி பிரியா அம்பா மற்றும் லைஃப் கேர்ப் பைட்டோ லேப்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஏ.ராஜேந்திரன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சியைப் பிரகாசமாக்கினர்.
இவ்விழாவானது கல்லூரி தாளாளர் முனைவர் சேது குமணன் மற்றும் முதல்வர் க.கருணாநிதி அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வை கல்லூரி தலைவர் முனைவர் சேது குமணன் தொடங்கி வைத்தார். அவருடன் திருமதி. கோகிலம் குமணன் - செயலாளர் சேது வல்லியம்மாள் அறக்கட்டளை மற்றும் சென்னை சோகா இஃகிதா மகளிர் கல்லூரி துணை முதல்வர் முனைவர் கண்மணி சுப்பிரமணியன், கல்லூரி இயக்குநர் முனைவர் சி.ஸ்டெல்லா ஆகியோர் கல்ந்து கொண்டன்ர்.
பெரு மரியாதைக்குரிய இறைஅன்பு அவர்கள், "பட்டமளிப்பு என்பது கல்வியின் நிறைவல்ல, அது கல்வியின் துவக்கமே. உண்மையான கற்றல் இப்போதுதான் தொடங்குகிறது. வயல்கள், மக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை என்பது ஒரு தொடர்ச்சியான கற்றல் பயணமாகும், அதில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஏதேனும் கற்றுக் கொள்ள வேண்டும். முதலாவது பண்பாடு விவசாயத்தோடு தொடங்கியது, விவசாயப் புரட்சியின் பின்னரே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன" என்று குறிப்பிட்டார்.
விழாவில் பேசிய அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் ரவி அவர்கள் "நிலையான விவசாயம், தட்பவெப்பத்தை தாங்கும் விவசாயம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பேசியதுடன் பட்டமளிப்பு பெறும் மாணவர்களுக்கு தனது நல்வாழ்த்துகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். மற்ற விருந்தினர்களும் மாணவர்களுக்கு வலமான எதிர்காலம் கிடைக்க வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது பி.எஸ்.சி. வேளாண் பட்டங்களை உற்சாகமாக பெற்றனர். சிறந்த மாணவர்களுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருது, சேது பாஸ்கரன் விருது, சேது இராணி அம்மாள் விருது, டாக்டர் எம். எஸ். ஸ்வாமிநாதன் விருது முனைவர் அமர்த்யா சென் விருது முதலிய சிறப்பு விருதுகளுடன் தங்க நாணயங்கள் மற்றும் கேடையங்கள் வழங்கப்பட்டன.
கல்லூரியில் 5 ஆண்டுகளுக்கும் மேல் சேவை செய்த பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தங்க நாணயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் இறுதியில், துணை முதல்வர் முனைவர் .விஷ்ணுபிரியா நன்றியுரையாற்றினார் விழா நிறைவடைந்தது.
No comments