Breaking News

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆவணித் திருவிழாவின் எட்டாம் நாள்.


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆவணித் திருவிழாவின் எட்டாம் நாள் - சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா - திரளான பக்தர்கள் பச்சை உடையணிந்து முருகப்பெருமானை வணங்கி வழிபாடு.


முருகப் பெருமான் வீற்றிருக்கும்  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.. ஆண்டு தோறும் இங்கு   பல்வேறு திரு விழாக்கள் நடை பெற்றாலும்  ஆவணி திருவிழா  முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

ஆவணித்திருவிழா நடைபெறும் 12  நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் காலை ,மாலை  இரு நேரங்களிலும் விதவிதமான வாகனத்தில்  எழுந்தருளி   உலா வந்து பக்தர்களுக்கு காட்சி  அளித்து  வருகிறனர்.


அந்த வகையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 7-ம் திருநாளில்  நேற்று சுவாமி  ஷண்முகர் சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து  வெட்டிவேர் சப்பரத்தில்   எழுந்தருளினார்.


இதனை தொடர்ந்து உற்சவர் சண்முகர்     வள்ளி தெய்வானையுடன் பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் இருந்து புறப்பட்டு
செம்பட்டு மற்றும் சிவப்பு நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவப்பு சாத்தி கோலத்தில் சிவ அம்சமாக பக்தர்களுக்கு காட்சி    அளித்தார்.


இதனை தொடர்ந்து  எட்டாம் திருநாளான இன்று அதி காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.


அதிகாலை  5 மணிக்கு சுவாமி சண்முகர்  தையல் நாயகி  வகையறா மண்டகப் படியில் இருந்து கிளம்பி வெண் பட்டுடுத்தி வெள்ளை மலர்கள் சூடி வெள்ளை   சாத்தி கோலத்தில்  பிரம்மாவின் அம்சமாக   8 வீதிகளிலும் வெள்ளி சப்பரத்தில் உலா வந்து  பக்தர்களுக்கு  காட்சி அளித்தார். 


அதனை  அடுத்து  சுவாமி சண்முகர்   பச்சை  சாத்தி மண்டபத்திற்கு வந்தடைந்தார்  அங்கு சுவாமி  சண்முகருக்கு பால் , மஞ்சள், விபூதி , தேன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு   பலவகையான அபிஷேகங்கள்  நடைபெற்றது. இந்த அபிஷேகத்தினை திரளான பக்தர்கள் கண்டு அரோகரா கோசமிட்டும்  முருகனின்  புகழை பாடியும்  பய பக்தியுடன் வணங்கியும் வருகின்றனர்.   


சரியாக   நண்பகல் 11மணியளவில் சுவாமி சண்முகர்  வள்ளி தெய்வானையுடன்  பச்சை  பட்டுடுத்தி, மரிக்கொழுந்து, திருநீற்றுப்பச்சிலை போன்ற பச்சை வண்ண மலர்கள்  கொண்ட அலங்காரம் செய்யப்பட்டு   பச்சை சாத்தி  கோலத்தில் காக்கும் கடவுளான திருமாலின் அம்சமாக  எட்டு  ரத வீதிகளையும்  சுற்றி  வலம் வந்து பக்தர்களுக்கு  காட்சி   அளித்து வருகிறார்.


இந்த  பச்சை சாத்தி  கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில்   வலம் வரும்  முருகப்பெருமானை  காண்பதற்கு எண்ணற்ற பக்தர்கள் பச்சை உடை அணிந்த படி  தேங்காய், பழம் பன்னீர் உள்ளிட்ட   பொருட்களை  கொண்டு  பச்சை கடைசல் சப்பரத்தில் வீற்றிருக்க கூடிய    முருகப்பெருமானை கண்டால் செல்வ வளம் பெருகும்  என்கிற ஐதீகத்தின்  படி  ஏராளமான  பக்தர்கள் பன்னீர் தேங்காய் பழம்  போன்றவற்றை கொண்டு  சுவாமியைதரிசனம்  செய்து வருகின்றனர்.


இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கருதப்படும்  திருத்தேரோட்டத்தன்று சுவாமி குமரவிடங்க பெருமான் அம்பாளுடன் தேரில் உலா வரும்  நிகழ்வு வருகிற  செப்டம்பர் 2 ஆம் தேதி திரளான பக்தர்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற   உள்ளது.  திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்  பெ.முகேஷ்

No comments

Copying is disabled on this page!