கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூட்டம்.
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம் சனிக்கிழமை இன்று நடைபெற்றது. கல்லூரியின் வேதியியல் துறை தலைவரும் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் உயர்திரு இரா. சிவக்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள் தலைமை தாங்கினார்.
தன்னுடைய தலைமை உரையில், வாழ்வு தந்த கல்லூரிக்கு முன்னாள் மாணவர்கள் ஆகிய தாங்கள் வளம் சேர்க்க வாருங்கள். கல்லூரியில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த மாணவ மாணவியர்கள் தற்பொழுது படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு உதாரணமாக திகழ்ந்து வருவது சாலச் சிறந்தது.
முன்னாள் மாணவர்கள் பல்வேறு பணிகளில் திறம்பட செயலாற்றி கல்லூரிக்குப் பெருமையைத் தேடித் தருவது மகிழ்ச்சியை தருகிறது என்று பேசினார். இக்கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் க. இராமமூர்த்தி அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
No comments