30 ஆண்டுக்கு பின் சந்திப்பு; வகுப்பறையில் மீண்டும் மாணவர்களாக, ஆசிரியர்களாக - வாணியம்பாடியில் நெகிழ்ச்சி.
முன்னாள் மாணவர்கள் மட்டும் சந்தித்துக் கொண்டதில்லாமல் ஆசிரியர்களும் ஓய்வு பெற்ற நிலையில் ஆங்காங்கே பிரிந்து இருந்தனர். இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் ஆசிரியர்களும் சந்தித்துக் கொண்டனர். தொடர்ந்து தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர். அப்பொழுது மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த, அதே அறையில் மாணவர்கள் அமர்ந்து கொண்டு ஆசிரியர் பாடம் நடத்தினார்.
அதே வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்து தங்களது ஆசிரியர் பாடம் நடத்த மீண்டும் பள்ளிப் பருவத்திற்கு சென்றதால், முன்னாள் மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதேபோல் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகள் நட்டனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், மீண்டும் வகுப்பறையில் அமர்ந்து மாணவர்களாக பாடம் கற்றது, ஆசிரியர், மாணவர்கள் மத்தியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
No comments