புதுச்சேரியில் கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி பதுங்கியிருந்த 8 பேர் கொண்ட கும்பலை போலிசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் பி.சி.பி., நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசிற்கு இன்பார்மராக இருந்தார். பி.சி.பி. நகர், அம்பேத்கர் நகரை பகுதிகளை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை பற்றி, அரியாங்குப்பம் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்து வந்தார்.
அதனால், அந்த வாலிபருக்கும், குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுக்கும் இடையே விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில், கத்தியுடன் கும்பல் ஒன்று அம்பேத்கர் நகர் தண்ணீர் தொட்டி அருகில் பதுங்கி இருப்பதாக, அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், குற்றப்பிரிவு போலீசார் சிரஞ்சீவி மற்றும் போலீசார் தண்ணீர் தொட்டி பகுதியில் பதுங்கியிருந்த 8 பேரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர்களை பற்றி போலீசாருக்கு தகவல் சொல்லும் வாலிபரை கொலை செய்ய திட்டமிட்டு பதுங்கி இருந்தது தெரிவித்தனர்.
மேலும், விசாரணை செய்தில், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த, ஆகாஷ், 22, வசந்த், 20, விஸ்வா, 22, சின்னா ஆகாஷ், 22, தினேஷ், 22, ராஜ், 24, ராம்குமார், 20, சாமிநாதன், 24 என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 3 மோட்டார் பைக், 4 மொபைல் போன், 4 கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 8 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
No comments