Breaking News

சீஷெலில் இறந்தவர் உடலை சொந்த ஊருக்குகொண்டுவர எம்.பி. வலியுறுத்தல்.

 


மயிலாடுதுறை எம்.பி.சுதா மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது. 

மயிலாடுதுறை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மயிலாடுதுறை அச்சுதராயபுரம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன்(40) என்பவர் சீஷெல் நாட்டில் வேலைபார்த்துவந்தவர். துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவந்து இறுதிகாரியங்கள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவரது மனைவி வித்யா மற்றும் குடும்பத்தினர் வேதனையுடன் என்னிடம் தெரிவித்தனர். பிழைப்பிற்காக சொந்த தாய்மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலைபார்த்து இறந்த மகேந்திரன் உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அவரது இழப்பால் பரிதவித்துவரும் குடும்பத்தினர். அவருக்கு இறுதிகாரியங்கள் செய்வதற்கு காலம் தாழ்த்தாமல் அவரது உடலை சீஷெல் நாட்டில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பிவைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதில் மயிலாடுதுறை எம்.பி. சுதா கேட்டுக்கொண்டுள்ளார் அதன் அடிப்படையில் சீஷெல் நாட்டில் இந்திய தூதரகத்தில் இருந்து தகவல் வந்துள்ளதாகவும் இதில் மகேந்திரன் உடல் உடற்கூறு ஆய்வுக்கு உள்ளதாகவும் மருத்துவக் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தகவல் வந்துள்ளதாகவும் மயிலாடுதுறை எம்பி சுதா தெரிவித்துள்ளார்.

No comments

Copying is disabled on this page!