திருப்பத்தூரில் நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சபரிநாதன் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாதன், மாவட்ட துணை தலைவர்கள் ஷாம்குமார், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புரை மாவட்ட மகளிரணி தலைவர் கார்த்திகா ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கிருஷ்ணன் மற்றும் மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தனர்.
இதில் பழைய ஓய்வுது திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், பொது வினியோக திட்டத்தை தனி துறையாக கொண்டு வரவேண்டும் இதில் நிர்வாகிகள் துரைசாமி, மாதேஸ்வரன், குமாரன், ஆறுமுகம், குணசேகரன், ரேகா, சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments