Breaking News

புதுச்சேரியில் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்ற பிரபல ரவுடியின் மகனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ராஜராஜனின் முதல் மனைவியின் மகன் மாதேஷ் (22). டிப்ளமோ படித்துள்ள இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 


இந்த நிலையில் லாஸ்பேட்டையில் உள்ள கராத்தே பயிற்சி மையத்தில் சேர்ந்த மாதேஷ், அங்கு வந்த கல்லூரி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 22ஆம்  தேதி கடத்திச் சென்றார். இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாதேஷின் மனைவி பிரியங்கா மற்றும் சைபர் கிராம் போலீசார் உதவியுடன் திருப்பதியில் பதுங்கி இருந்த மாதேஷை கைது செய்த போலீசார் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


போலீசார் விசாரணையில், ஐந்து மொழி சரளமாக பேசும் திறன் கொண்ட மாதேஷ், வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூபாய் லட்சக்கணக்கில் மோசடி செய்ததும், இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி மயக்கி பணம் பறித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து லாஸ்பேட்டை போலீசார், மகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி 

No comments

Copying is disabled on this page!